கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்  கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளராக  பணியாற்றி இன்று 26 ஓய்வு  பெற்ற  நற்பிட்டிமுனை எஸ்.எம்.ஏ. ஜஹ்பர்  கல்முனை வலயக் கல்வி அலுவலக  நலன் புரி சங்கத்தால்  பாராட்டி கௌரவிக்கப் பட்டார் . 

கல்முனை வலயக் கல்வி அலுவலக நலன்புரிச்சங்க  தலைவர் யு.எம். இஸ்ஹாக் இன்  நெறிப்படுத்தலில்  வலயக் கல்வி அலுவலக  கணக்காளர் எல்.ரீ .சாலிதீன்  தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில்  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் ,பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.முக்தார் ,எஸ்.எல்.அப்துல் ரஹீம் ,நிருவாக உத்தியோகத்தர் ஜீ .பரம்சோதி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , நலன்  புரி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஆசிரியராக ,அதிபராக , கோட்டக்  கல்விப் பணிப்பாளராக பதவி வகித்து ஓய்வு பெற்ற ஜஹுபரின்  சேவைகளைப் பாராட்டியும் அவர் பழிவாங்கப் பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும்  அதிதிகளால் உரை நிகழ்த்தப் பட்டதுடன் . நலன் புரிச் சங்கத்தின் அன்பளிப்புக்களும்  அவருக்கு வழங்கி வைக்கப் பட்டன .

பிரியாவிடையை  ஏற்றுக் கொண்ட  கோட்டக்  கல்விப் பணிப்பாளர் ஜஹ்பர்  நலன் புரிச் சங்கத்தை பாராட்டியதுடன் தனது சேவைக்கால அனுபவங்களும் அங்கு பகிர்ந்து கொண்டார் 


கருத்துரையிடுக

 
Top