(எம்.எம்.ஜபீர்)
6ஆம் கொளனி, சொறிக்கல்முனை சம்மாந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள  அல்-மஸ்ஜிதுல் ரௌழா மையவாடி தைக்கா  பள்ளிவாசல் டுபாய் நாட்டின் ரகுமா அமைப்பின்  2 மில்லியன் ரூபாய் செலவில் முஸ்லிம் கலாச்சார மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பள்ளிவாசலுக்கு இன்று (13)அடிக்கல் நாட்டப்பட்டது.

6ஆம் கொளனி ஜூம்மா பள்ளிவால் தலைவர் எம்.எச்.அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முஸ்லிம் கலாச்சார மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்களான எம்.அல்தாப், எஸ்.கஸ்ரீம், சவளக்கடை அர்-ரகுமான் ஜும்மா பள்ளிவால் தலைவர் ஐ.எல்.பாறூக், 6ஆம் கொளனி ஜூம்மா பள்ளிவால் செயலாளர் எஸ்.ஐ.எம்.முபீன், பொருளாளர் எம்.சீ.ஏ.ஜப்பார், சாளம்பைக்கேணி-02 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.ஜலீல், சாளம்பைக்கேணி-02 கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.எம்.அஸ்வர், றோயல் விளையாட்டுக் கழக அணித் தலைவர் வை.பாரிஸ், மிலேனியம் இளைஞர் கழகத்தின் அமைப்பாளர் ஏ.எல்.பைஸாத், பிரதேச முக்கியஸ்தர்கள், பொது மக்கள் விளையாட்டுக் கழகங்களின் பிரநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப்பள்ளிவாசல் 1973 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் என்பது குறிப்பிடதக்கது. 

கருத்துரையிடுக

 
Top