கடந்த பல மாதங்களாக நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட  முஸ்லிம் பிரதேசங்கள் தெரு மின் விளக்கின்றி இருளில் மூழ்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

குறிப்பாக  நாலாம்  கிராமத்தின்  வீரதிடல் பிரதேசம்  இருளில் மூழ்கி உள்ளது . நாவிதன்வெளி பிரதேச சபை  தமிழ் பிரதேசங்களில்  தெரு மின் விளக்குகள் பொருத்தும் அதேவேளை  முஸ்லிம் பிர  தேசங்களை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

மழை   காலம் ஆரம்பித்துள்ளதால் வீரதிடல் பிரதேசம் தெரு மின் விளக்கில்லாமையால் இருள் சூழ்ந்து வனப் பிரதேசம் போன்று இருப்பதாகவும் இரவு வேளையில் மக்கள் வெளியிறங்குவதற்கு  அச்சப் படுவதாகவும்,   பிரதேச வாசியான எம்.பீ.எம்.சஹீத் தெரிவித்தார் . வறிய  மக்கள் வாழும் இப்பிரதேசத்தை  இனரீதியாக  வேறுபாடு காட்டாமல் தெரு மின் விளக்கு பொருத்துவதற்கு நாவிதன்வெளி பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார் 

குறித்த பிரதேசத்துக்கு தெரு மின் விளக்கு பொருத்த  நாவிதன்வெளி பிரதேச சபை தவறும் பட்சத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப் போவதாக சஹீத் மேலும் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top