கல்முனை மாநகர பிரதி முதல்வர் குற்றச்சாட்டு 

*திண்மக்கழிவகற்றும் திட்டத்திற்காக கிழக்கு மாகாண சபையினால் கடந்த வருடம் ரூபா 23 லட்சம் ஒதுக்கப்பட்டது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சாய்ந்தமருது வொலிவேரியனில் இடம் இனங்காணப்பட்டு வேலைத்திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டும் அதனை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டதனால் அதற்கான நிதியை மாகாண சபை மீளப்பெற்றுக்கொண்டது.
*2014 ஒக்டோபர் 23ம் திகதி சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. வருடம் ஒன்று கடந்து விட்ட நிலையிலும் தாலி இழந்த விதவைப் பெண் போல் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. பக்கத்து கிராமமான காரைதீவிலும் அமைந்துள்ள கடற்கரை பூங்கா திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட மணப்பெண் போல் காட்சியளிக்கின்றது. சாய்ந்தமருது பூங்காவை அழகுபடுத்துவற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் முபாறக் டெக்டைல்ஸ், அஸ்லம் பிக் மார்ட், பெமிலி சொய்ஸ் ஆகிய முன்று வர்த்தக நிறுவனங்கள் முன்வந்தன.அதிலும் முபாறக் டெக்டைல்ஸ் 10 வருடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பூங்காவை அழகுபடுத்தி அபிவிருத்தி செய்ய முன்வந்த போது முதல்வர் நிசாம் காரியப்பர் அதில் அக்கறை காட்டவில்லை.
*வேலைவாய்ப்பிலும் புறக்கணிப்பு நடைபெறுகின்றது. மேயர் விரும்பிய உறுப்பினர்களுக்கு இரகசியமான முறையில் வேலைவாய்பை வழங்கி வருகின்றமை.
*2015ல் கொண்டுவந்த மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தில் வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர், மின்சாரம் வழங்குவதற்கு 35 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில் வறிய குடும்பங்களை நான் உட்பட ஒவ்வொரு உறுப்பினர்களும் தெரிவு செய்து அதற்கான ஆவணங்களை தயார் செய்து மாநகர சபை ஆணையாளரிடம் ஒப்படைத்தோம். ஆனால், ஆணையாளர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் எங்களை மக்கள் மத்தியில் பொய்யர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும் காட்டப்பட்டுள்ளது. நாட்டில் நல்லாட்சி நிலவுகின்ற காலகட்டத்தில் நாம் மக்களை ஏமாற்றுகிறோம்.
*கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் கடைகள் கட்டுவதில் முதல்வர் காட்டிய அக்கறை, அர்ப்பணிப்பு, தியாகத்தை நான் பாராட்டுகிறேன். அதே அக்கறையும், அர்ப்பணிப்பும், தியாகமும் சாய்ந்தமருது அபிவிருத்தியில் இல்லாமல் போனது ஏன்? இது போன்ற செயல்களினால்தான் சாய்ந்தமருது மக்கள் பிரிந்து போக வேண்டுமென்று நினைக்கின்றனர்.

கருத்துரையிடுக

 
Top