பிரதி அமைச்சர் ஹரீஸ் 


முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா தனது 83 ஆவது வயதில் இன்று (04) அதிகாலை 2 மணியளவில் கொழும்பில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
கல்முனை மாநகர சபையின் முதல்வர் எனப்பல உயர் பதவிகளை வகித்த மசூர் மௌலானா மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
தான் பிறந்த கிராமத்தின் மீது அதீத அக்கறையுள்ள அரசியல் தந்தையான மசூர் மௌலானாவின் மறைவையிட்டு கவலையடைகின்றேன்.
தமிழ் அரசியல் தலைமைகளோடு தனது அரசியலை ஆரம்பித்த ஒரு தலைமையாகும். தமிழ், முஸ்லிம் நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, உரிமை சார்ந்த விடயங்களில் முன்னின்று உழைத்த ஒரு அரசியல் முதிசமாக அவரை நான் பார்க்கின்றேன். அன்னாரின் மறைவு முஸ்லிம், தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.
இவரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் என ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
கருத்துரையிடுக

 
Top