கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர்
(அபு அலா)
கிழக்கு மாகாணத்தில்லுள்ள 5 வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கான அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று செவ்வாய்கிழமை (01) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, திருக்கோவில் வைத்தியசாலைகளும் திருகோணமலை மாவட்டத்தில் மூதுர், கிண்ணியா மற்றும் குச்சவெளி வைத்தியசாலைகளும் இவ்வாறு தரமுயர்த்துவதற்கான அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top