திவிநெகும பயனாளிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்த்திராமல் பொறுப்புணர்ச்சியுடனும் அக்கறையுடனும் செயற்பட்டு உங்கள் வருமானத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தெரிவித்தார்.
 கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  திவிநெகும உதவி பெறும் 31 பிரிவுகளிலும் இருந்து  அரசாங்கத்தின் விசேட திட்டமான (ஆதர்ஷன கம்மான) தெரிவு செய்யப் பட்ட கிராமம்  திட்டத்தின் கீழ்  தெரிவு செய்யப் பட்ட நற்பிட்டிமுனை -04 ஆம் பிரிவுக்கான   குடும்பங்களுக்கு  விளக்கம் அளிக்கும்  நிகழ்வு இன்று(15) நற்பிட்டிமுனை  அல் -அக்ஸா மகாவித்தியாலய  ஆரம்பப் பிரிவு அகமத்  மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  
மருதமுனை நற்பிட்டிமுனை திவிநெகும வங்கி வலய முகாமையாளர் எம்.எல்.நாசீர்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், திவிநெகும உதவி பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கோடும்,சுயதொழிலை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் அடிப்படையிலுமே கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குள் 31 திவிநெகும பிரிவுகளில் இருந்து  நற்பிட்டிமுனை -04 ஆம் பிரிவு தெரிவு செய்யப் பட்டுள்ளது.

 எனவே,திவிநெகும பயனாளிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்த்திராமல் பொறுப்புணர்ச்சியுடனும் அக்கறையுடனும் செயற்பட்டு உங்கள் வருமானத்தை உயர்த்திக்கொள்வதோடு தங்களின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் ,தீய பழக்க புகைத்தல்,மது  பாவனைகளில்  இருந்து விடு படுவதற்கும் , வறுமை நிலையில் இருந்து  விடுபடவும் ,சமூக மட்டத்தில் காணப் படும்  பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஒவ்வொருத்தரும்  முயற்சிக்க வேண்டும் என்றார். இந்த திட்டத்தில்  நற்பிட்டிமுனை-04 ஆம் பிரிவை தெரிவு செய்தமைக்கு இப்பிரதேச மக்கள் எமது பிரதேச செயலாளருக்கு  நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி,திவிநெகும சமூக அபிவிருத்திப் பிரிவு பொறுப்பதிகாரி என்.எம்.நௌசாத் , சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான அமினுதீன்,ஜெமீல்,கலீல்,உமறுநாச்சி உட்பட நற்பிட்டிமுனை-04 ஆம் பிரிவு திவிநெகும பயனாளிகளும் கலந்து கொண்டனர் 


கருத்துரையிடுக

 
Top