யு.எம்.இஸ்ஹாக் 
அம்பாறை மாவட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரச சார்பற்ற நிறுவனமான  சேவோ  அமைப்பின் 15ஆவது ஆண்டு பூர்த்தி விழாவும் , பிரதேச முன் பள்ளி மாணவர்களின் விடுகை விழாவும் ,பரிசளிப்பும்  சேனைக்குடியிருப்பு சேவோ  நிலையத்தில் இன்று இடம் பெற்றது.

சேவோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் , கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி  ஏ.லேபில் யு.ஏ. கப்பார் , ஓய்வு பெற்ற அதிபர் கே.சந்திரலிங்கம், கல்முனை ஸ்ரீ சுபதிரா  ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரன்முத்துகல சங்கரத்ன   ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு  உரையாற்றியதுடன் முன் பள்ளி சிறார்களுக்கு பரிசுகளும் வழங்கி வைத்தனர் . சிறார்களின் கலை நிகழ்வுகளும் அங்கு இடம் பெற்றதுடன்  நீண்டகாலம் சேவோ நிறுவனத்தில் பணியாற்றும் எம்.ரசிலாவதி என்பவர் பொன்னாடை விருது  வழங்கி கௌரவிக்கப் பட்ட நிகழ்வும் அங்கு இடம் பெற்றது.

கருத்துரையிடுக

 
Top