ஓய்வு பெற்ற  கோட்டக் கல்விப் பணிப்பாளர் உட்பட கல்முனை வலயக் கல்வி அலுவலக முஸ்லிம் கோட்ட பாடசாலைகளில் அதிபர்களாக கடமை புரிந்து ஓய்வு பெற்றவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு   ஓய்வு பெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர் தலைமையில்  நேற்று முன் தினம் கல்முனை மஹ்மூத் மகளிர்  கல்லூரி மண்டபத்தில் நடை பெற்றது.

இவ்விழாவில்  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம்  பிரதம அதிதியாகவும்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கௌரவ அதிதியாகவும்  விசேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.முக்தார் ,எஸ்.எல்.அப்துல் ரஹீம் ,கணக்காளர் எல்.ரீ.சாலிதீன்  ஆகியோர் கலந்து கொண்டனர் 

கல்முனை  முஸ்லில் கோட்டத்தில் உள்ள 12 அதிபர்கள் உட்பட கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பரின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர் உட்பட அதிபர்களும் கௌரவிக்கப் பட்டனர் .

அதிதிகள் மற்றும் வலய அதிபர்கள்  சேவை நலனை பாராட்டி உரையாற்றியதுடன்  நினைவு சின்னம் ,பொன்னாடை ,பரிசு வழங்கி கௌரவித்தனர் . ஆசிரியரும்  பிறை எப்.எம்  வானொலி அறிவிப்பாளருமான கே.எல்.தௌபீக் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்

கருத்துரையிடுக

 
Top