தினகரன் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றும் விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.பரீத் என்பவருக்கு பிரதி அமைச்சருடன் செயற்படுகின்ற ஒருவரினால் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் சனிக்கிழமை 28 ஆம் திகதி இரவு விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்திருந்த வேளையிலேயே இத்தொலைபேசி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதி அமைச்சர் கொழும்பில் கலந்து கொண்ட நிகழ்வில் தானும் கலந்து கொண்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்ட தனது பெயரை பிரசுரிக்கவில்லை என்று கூறியதாகவும் இதற்காக கொழும்பில் வைத்து தன்னை தூக்கவுள்ளதாகவும் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் தினகரன் ஆசிரியர் பீடத்தில் கடமை புரியும் ஏ.ஆர்.பரீத் ஞாயிற்றுக்கிழமை (29) காலை பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


கருத்துரையிடுக

 
Top