(யு.எம்.இஸ்ஹாக்) கல்முனை  வடக்கு   ஆதார வைத்திய சாலை உள மருத்துவப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள  இரண்டு நாள் உள நல   மேம்பாட்டுக் கண்காட்சி நாளை  ( திங்கட் கிழமை ) நடை பெறவுள்ளது .

பிரதேசத்தில் உளநல மேம்பாடு,உளநலப் பிரச்சினைகள் ,சமூக நலன், அபிவிருத்தி என்பவற்றை நோக்காகக் கொண்டு  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உளநலப்  பிரிவானது  உளநல அறிமுகமும் மேம்பாடும் ,உள  நோய்களில்  சிகிச்சை முறைகளும் மருந்துகளின் தொழில்பாடும் , உளப்  பிரச்சினைகளில்  தளர்வு பயிற்சிகளின் பயன்பாடு ,போதைப் பொருள் பாவனையின் தீங்குகளும் சிகிச்சை முறைகளும் ,உளநோயாளரின்  உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் ,உள  நோயின் சமுக நாணதினைக்  குறைதலும் அறிவூட்டலும் ,பாடசாலை உளசுகாதரம் ,பாரிய உள நோய்கள் ,பால் நிலை வன் முறைகளும் தீர்வுகளும்  என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இருநாள் கண்காட்சி (30,01) நடை பெறவுள்ளது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்  டாக்டர் ஆர்.முரளீஸ்வரன்  தலைமையில் நடை பெறவுள்ள இக் கண்காட்சி நிகழ்வில் கல்முனை நீதிவான் நீதி மன்ற நிதிபதி ஏ.ஜூட்சன்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளார் .
அதே வேளை  இன்று மாலை கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில்  கடமை புரியும் உள்ளக பயிற்சி வைத்தியர்கள் மற்றும் பயிலுனர்களை வரவேற்கும் நிகழ்வும்  இடம் பெறவுள்ளதாக  வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top