மின்பாவனையாளர்களின் நன்மைகருதி அவர்களின் அவசர தேவைகளை முறையிடவும், ஏற்படும் பழுதுகளை திருத்திக்கொள்ளவும் கிழக்குமாகாண மின்பாவனையாளர்கள், 026 205 4444  என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதன் ஊடாக மின்பாவனையாளர்களின் அவசர தேவைகளை நிவர்த்திக்க முடியுமென இலங்கை மின்சார சபையின் கல்முனைப் பிராந்திய பிரதம பொறியலாளர் எம்..ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பாவனையாளர்கள் அவர்களுக்கு ஏற்படும் தடங்கல்களை அண்மையில் உள்ள பிரதேச பாவனையாளர் சேவை நிலையங்களுக்கு  அழைப்புகளை விடுத்து ஏற்படும் தடங்கல்களை நிவர்த்தித்து வந்ததாகவும், அவற்றில் சில காலதாமதம் இடம்பெறுவது உணரப்பட்டதன் காரணமாக அதனை நிவர்த்திக்கும் பொருட்டு, இலங்கை மின்சார சபை மாகாண ரீதியாக 24 மணிநேரமும் இயங்கும் வண்ணம் விசேட இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளதாகவும், குறித்த இலக்கங்களுக்கு வழங்கப்படும் முறைப்பாடுகள் உயர் அதிகாரிகளால் மேற்பார்வை செய்யப்படுவதாகவும், இதனூடாக பாவனையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கிழக்குமாகாண மின்பாவனையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் அவசர திருத்த வேலைகளை 026 205 4444 என்ற இலக்கத்துக்கு தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக பெற முடியும் என்றும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top