கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்ற இருவர் மதீனா பல்கலைக் கழகத்துக்கு தேர்வாகியுள்ளனர் . அவர்கள் இருவரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று கலாசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.

நட்பிட்டிமுனையை சேர்ந்த  மௌலவி ஏ.முகம்மது றிக்காஸ் (ஹாமி), சவளக்கடை சேர்ந்த  மௌலவி ஏ.டபிள்யு .முகம்மது ரிஸ்கான் (ஹாமி)  ஆகிய இருவருமே  மதீனா பல்கலைக் கழகத்தில்  பட்டம் பெறுவதற்கு தெரிவானவர்களாவர் .

இவர்களை  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  இன்று கல்லூரி அதிபர்  மௌலவி யு.எல்.ஏ.கபூர் (பலாஹி) தலைமையில் இடம் பெற்றபோது கல்லூரி விரிவுரையாளர்கள், நிருவாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டு  வாழ்த்தி பாராட்டு தெரிவித்து பரிசுகளும் வழங்கி வைத்தனர் .
கருத்துரையிடுக

 
Top