(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு  பெற்ற சிரேஷ்ட வங்கி உத்தியோகத்தர் ஏ.ஆர்.அப்துல் சத்தார் தொகுத்து எழதிய “மாண்புறும் மருதமுனை வரலாற்றுப் பதிவுகள்”நூலின் ஞாபகார்த்த பிரதிகள் அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு  நேற்று  மாலை(23-11-2015)வழங்கிவைக்கப்பட்டது.

ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மீரா எஸ் இஸ்ஸதீன், எம்.ஏ.பகுறுதீன், ஏ.எல்.எம்.சலீம், ஐ.எல்.எம்.றிஸான், எம்.சஹாப்தீன் ஆகியோருக்கு அவர்களின்  வீடுகளுக்குச்  சென்று நூலாசிரியர் ஏ.ஆர்.அப்துல் சத்தார் ஞாபகார்த்த பிரதிகளை வழங்கி வைத்தார்.   கருத்துரையிடுக

 
Top