(யு.எம்.இஸ்ஹாக்) 

சென்.ஜுடி சர்வதேச தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து வெளியான தாதியர்களுக்கான முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை (15.11.2015) நடை பெற்றது.
சென்.ஜுடி சர்வதேச தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தலைவர் எம்.ஏ. அப்துல் வாஹிட் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடீயன் மண்டபத்தில் தாதி பயிற்சியை நிறைவூ  செய்த 80 தாதிகளுக்கான பட்டமளிப்பு விழா வைபவத்தில்  பிரதம  அதிதியாக  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர கலந்து கொண்டு பயிற்சியை முடித்த தாதிகளுக்கான சான்றிதழையூம் நினைவூப் பதக்கமும் வழங்கி வைத்தார்
 கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர்இ கல்லூரியின் பணிப்பாளர் சப்ராஸ் மன்சூர் உட்பட அதிகாரிகள் பலரும்  பெற்றௌர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதம அதிதியால் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர்களும் நினைவூச் சின்னம் வழங்கி கௌரவிக்கப் பட்டனர். பட்டம் பெற்று வெளியான அனைத்து தாதியர்களுக்கும் கிழக்கு மாகாண சபையால் தொழில் வழங்கும் வாய்ப்பு கிடைக்காத சந்தர்ப்பத்தில் மத்திய அரசின் உதவியூடன் அவர்களுக்கான தொழிலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் தெரிவித்தார்


கருத்துரையிடுக

 
Top