திருகோணமலையிலிருந்து 500 கிலோமீற்றர்களுக்கு அப்பால் நிலைகொண்டிருந்த தாழமுக்கம்  தற்போது 250 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
 
இதனால், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடலில் மீன்பிடி மற்றும் கடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இதன் காரணமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top