(பி.எம்.எம்.ஏ.காதர்)


கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை வலுப் படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கடந்த திங்கள்கிழமை திருகோணமலை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள  அம்பாறை,மட்க்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள உள்ளுராட்சி உதவி ஆணையார் அலுவலகங்களில் இந்த உள்ளுராட்சி வள நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சிட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரனையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஆசியா மன்றம் நடை முறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தன் கீழ் இந்த உள்ளுராட்சி வள நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்கு முதற்கட்டமாக முப்பது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சிட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் மேலும் தெரிவித்தார்.

இந்த உள்ளுராட்சி வள நிலையங்கள் அமைக்கப்பட்ட பின்னனர் கிழக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தின் ஆலோசனை வழிகாட்டலில் உள்ளுராட்சி மன்னறங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கும்; மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பயிற்சிக் கருத்தரங்கு  தொழில் நுட்ப ஆலோசனைகள் என்பன வழங்கப்படவு ள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top