பீ.ஜே. யை இலங்கை வராமல் தடுத்ததற்கான காரணம் எதுவும் தமக்கு சொல்லப்படவில்லை என தெரிவித்த சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத், நல்லாட்சியில் தமக்கு அநீதி இழைக்கபட்டுள்ளதாகவும் சீற்றம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தவ்ஹீத் ஜமாத்தின் துணைச் செயலாளர் ரஸ்மின் மௌலவி வட்ஸப் மூலமாக சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறுகையில்
நாங்கள் லெட்டர் இயக்கமல்ல. மக்கள் செல்வாக்குடன் தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அப்படியே சொல்லி வருபவர்கள். நாடு பூராகவும் கிளைகளை கொண்டு மிகத் திறம்பட அவற்றை வழிடத்துகிறோம். சில லெட்டர் பேட் இயக்கங்களுக்கும், சில நாகரீகமற்ற தனிநபர்களின் அழுத்தங்களுக்கும் அடிபணிந்து இந்த அரசாங்கம் பீ.ஜே. வருகையை தடுத்திருந்தால் இந்த நல்லாட்சிக்கு எதிராக போராடத் துணிபவர்களில் நாங்களும் முதன்மை பெறுவோம்.
இந்த பௌத்த நாட்டில் ஒரு அரசாங்கம் செய்யவேண்டியதை, ஒரு தனி அமைப்பாக நாம் மேற்கொள்ளும் பணிதான் இரத்தானம். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு இது நன்கு தெரியும். எமது சேவைகளை அறிந்தும், ஏற்றுக் கொண்டும்தான் எமக்கு அந்த உயர் விருது கிடைத்ததது. இவ்வாறு அரசாங்க உயர்மட்டம் வரை தவ்ஹீத் ஜமத்தின் பணிகள் நன்கு அறியபட்டுள்ளது.


உலகம் பூராகவும் சமூக அமைதி, நல்லிணக்கத்திற்காகவும் குரல்கொடுத்த, பாடுபட்ட ஒருவருக்கு இந்த அரசாங்கம் உரிய காரணமின்றி அநீதி இழைத்துள்ளது. நீதியின் மறுப்பு என்பது அநீதியின் அடிப்படை ஆகும். நல்லாட்சி என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பீ.ஜே. இலங்கைவர அனுமதி மறுத்ததன் மூலம் தெட்டத்தெளிவான அநீதி இழைத்துள்ளது. அநீதிசெய்த இந்த அரசாங்கத்திற்கு எதிராக தமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மிகவிரைவில் தவ்ஹீத் ஜமாத் அறிவிக்கவுள்ளது. ஆம் எமக்கு நல்லாட்சியில் அநீதி இழைக்கபட்டுள்ளது. இது முழு இலங்கை முஸ்லிம்களுக்குமான அநீதியாகவே நோக்குகிறோம். உரிய பதிலடிகளை விரைவில் அறிவிப்போம் எனவும் இதன்போது ரஸ்மின் மௌலவி கூறினார்.

கருத்துரையிடுக

 
Top