கடந்த வெள்ளிகிழமை (20) ஓய்வு பெற்ற  கல்முனை கல்வி வலய தமிழ் கோட்டத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பொ .ஜெகநாதன் அவர்களின் சேவையைப் பாராட்டி கல்முனை வலயக் கல்வி தமிழ் கோட்ட அதிபர்களினால் ஏற்பாடு செய்யப் பட்ட பிரியாவிடை சிறப்பு நிகழ்வு சனிக்கிழமை  (21) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை  நல்லதம்பி  மண்டபத்தில் இடம் பெற்றது .

கல்முனை தமிழ் கோட்ட  அதிபர் சங்க தலைவர் வே .பிரபாகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் , பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.மயில்வாகனம் ,எஸ்.எல்.ஏ.ரஹீம் ,பீ.எம்.வை.அரபாத், கணக்காளர் எல்.ரீ . சாலிதீன் உட்பட தமிழ் கோட்ட  அதிபர்களும்  கலந்து சிறப்பித்தனர் .

நிகழ்வுக்கு தனது பாரியாருடன் வருகை தந்திருந்த ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் பொ .ஜெகநாதன்  வாழ்த்துப்பா  வாசித்து ,மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி , நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டார் 

கருத்துரையிடுக

 
Top