(யு.எம்.இஸ்ஹாக்) அம்பாறை  மாவட்டத்தில்  வளப் பற்றாக்குறையுடன் காணப் பட்ட சம்மாந்துறை  ஆதார வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை  நிபுணராக கடமையாற்றி மேல்  படிப்புக்காக  சிங்கபூர் சென்று பெருங்குடல் அறுவை சிகிச்சை ஃபெல்லோஷிப் (சிங்கப்பூர்)
 Fellowship in Colo rectal Surgery (Singapore) பயிற்சி  முடித்து   நாடு திரும்பிய  சத்திர  சிகிச்சை நிபுணர்   டாக்டர்  ஏ.டபிள்யு .எம். சமீம் Consultant Surgeon DR.A.W.M.Sameem  MBBS (SL),  MD         ( Surgery),  MRCS (England),  Diploma in Laparoscopic Surgery (France)  Fellowship in Colo rectal  Surgery (Singapore)  Consultant Surgeon )அவர்கள்  மூதூர் தளவைத்திய சாலையில்  சத்திர சிகிச்சை  நிபுணராக கடமை ஏற்றுள்ளார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில்  கடமையாற்றிய காலத்தில்  வளப்பற்றாக்குறையுடன்   பல  சத்திர சிகிச்சைகளை மேற் கொண்டு  வெற்றி கண்டவர் . மருதமுனையை  பிறப்பிடமாகவும்  , அல் -மானார் மத்திய கல்லூரியில்  கல்வி கற்று  களனிப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவருமான  சத்திர சிகிச்சை நிபுணர் மருதமுனை மர்ஹூம் அப்துல் வாஜீத் அவர்களின் புதல்வர்  டாக்டர்  ஏ.டபிள்யு .எம். சமீம் மூவின வரியா மக்கள் வாழும் மூதூர் தள வைத்தியசாலையில்  நியமிக்கப் பட்டிருப்பது  பாராட்டதக்கதென  பலராலும் பேசப் படுகின்றது . இதே வேளை மூதூர்  வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் உட்பட வைத்தியர்கள் டாக்டர்  ஏ.டபிள்யு .எம். சமீம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதும் பாராட்டத்தக்கது .

கருத்துரையிடுக

 
Top