( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்வியமைச்சு அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் கொழும்பு தேஸ்டன் கல்லூரியில் ஒழுங்கு செய்திருந்த தேசிய ஆங்கில மொழி தினப் போட்டியின் எழுத்தாக்கப் போட்டியில் ( Creative writing) கல்முனை ஸாஹிரா 
தேசியக்கல்லூரி மாணவன் எம்.ஏ.எம்.கய்ஸான் முதலாம் இடம்பெற்று கல்லூரிக்கும் கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் இம்மாணவன் கல்முனைக்குடியைச் சேர்ந்த இக்கல்லூரியின் பழைய மாணவரான டாக்டர் எம்.ஏ.ஸி.எம். அமீன் , இக்கல்லூரியிலிருந்து முதன்முதலாக மருத்துவக்கல்லூரிக்கு பிரவேசித்த முதல் மாணவியான டாக்டர் நிஜாமியா அமீன் தம்பதிகளின் புதல்வராவார்.
கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களின் மேற்பார்வையில்  ஆங்கிலபாட பொறுப்பாசிரியர்களான  எஸ்.ஐ.எம்.றபீக் மற்றும் எம்.எப்.றிஸ்வி ஹாதிம் ஆகியோரின்  வழிகாட்டலில் இம்மாணவன் இந்த வெற்றியினை பெற்றுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top