கல்முனை அல் -ஹாமியா அரபுக் கலாசாலையில் விரிவுரையாளராக பணியாற்றிய எகிப்து நாட்டை சேர்ந்த அகமட் ஹுசைன்  ஹுசைன் அல் ஜதாவி  அவர்களுக்கு  கலாசாலையில் இன்று பிரியாவிடை வைபவம் இடம் பெற்றது .

கடந்த 2013 ஆம் ஆண்டு கல்முனை அல் -ஹாமியா அரபுக் கலாசாலைக்கு  விரிவுரையாளராக நியமிக்கப் பட்டிருந்த எகிப்து நாட்டை சேர்ந்த அகமட் ஹுசைன்  ஹுசைன் அல் ஜதாவி அவர்கள் நாளை( 15) அவரது  நாட்டுக்கு திரும்பவுள்ளார் .  3 வருடங்களாக  அரும் பணியாற்றிய எகிப்து நாட்டை சேர்ந்த அகமட் ஹுசைன்  ஹுசைன் அல் ஜதாவி அவர்களுக்கு பிரியாவிடை  வழங்கும் நிகழ்வு இன்று அல் -ஹாமியா அரபுக் கலாசாலை அதிபர் மௌலவி   யு .எல்.கபூர் (பலாஹி) தலைமையில் இடம் பெற்றது.
அல் -ஹாமியா அரபுக் கலாசாலை விரிவுரையாளர்கள் .கலாசாலை  நிருவாகிகள்  கலந்து கொண்டு  நன்றி பாராடியதுடன்  நினைவு சின்னங்களும் பரிசுகளும் வழங்கி கௌரவித்தனர் 


கருத்துரையிடுக

 
Top