பயங்கரவாதம் நிலவிய காலத்தில் கூட இடம் பெறாத வீதி விபத்துக்களும் ,குற்றச்செயல்களும் நாட்டில் இடம் பெறுவதாக கல்முனை பொலிஸ்  நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி  போலிஸ் பரிசோதகர்  இந்துநில்  கல்முனையில் இடம் பெற்ற சிவி பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தெரிவித்தார் .

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி 01 தொடக்கம் 08 வரையான பிரிவு சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கான விழிப்பூட்டல் கூட்டம் இன்று மாலை கல்முனை அல் -பஹ்ரியா மகாவித்தியாலய  மண்டபத்தில் நடை பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே போலிஸ் அதிகாரி மேற்கண்டவாறு பேசினார் .அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்  கல்முனை பிரதேசத்தில் சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம் பெறுகின்றன அதனை பொலிசாரால் மாத்திரம் கட்டுப் படுத்த முடியாது .சிவில் பாதுகாப்பு குழுக்களின் ஒத்துழைப்பு தேவைப் படுகின்றது. இதனை நீங்கள் சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் . சில பிரதேசங்களில் கஞ்சா பாவனை, ஹென்ஸ் ,லேகியம்  போன்ற  பொருட்கள் மாணவர்கள் மத்தியிலும்  கொண்டு செல்லப் படுகின்றன . இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு பொலிசாருடன் சிவில் பாதுகாப்பு குழுக்கள் இணைந்து செயலாற்ற வேண்டும் . 
கல்முனை  பிரதேசத்தில் இயங்கும் இரண்டு பாபுல் கடைகளில் சட்ட விரோத செயல்கள் இடம் பெறுவதாகவும் அந்த இரண்டு கடைகளையும் மூடுவதற்கு பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  சிவில் பாதுகாப்பு குழுக்கள் பொலிசாரிடம் கூறியதற்க்கமைய  இன்னும் இரண்டு வாரத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப் படும் என  அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார் .

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர்.ஏ.எல்.எம்.பாரூக் ,கல்முனை அல் -பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் எம் .ஐ.எம்.ரசாக் ஆகியோரும் அங்கு உரையாற்றினார்கள் . 

கருத்துரையிடுக

 
Top