ஆறு அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலையை நுகர்வோர் அதிகாரசபை நேற்று (18) வௌியிட்டது.
அதற்கமைய மைசூர் பருப்பு ஒரு கிலோ 190.00 உருளைக்கிழங்கு ஒரு கிலோ 145.00, பெரிய மற்றும் சிறிய வெங்காயம் ஒரு கிலோ 155.00,  என்று அதிகாரசபை அறிவித்துள்ளது.

மேலும் உலர்ந்த மிளகாய் ஒரு கிலோ 355.00 என்றும் தோலுரிக்கப்பட்ட கோழி ஒரு கிலோ 480 ரூபா என்றும் கோதுமை மா ஒரு கிலோ பக்கற் 95.00 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிர்ணய விலை நாளை (20) தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது என நுகர்வோர் அதிகாரச்சபை மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top