தேசிய மட்டத்தில் நடை பெற்ற  மீலாத் போட்டியில்  கல்முனை கல்வி வலயம் நாடக போட்டியில்  முதலாம் இடத்தையும்,  அரபுப் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தையும்  பெற்றுள்ளதாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார் .
பாடசாலைகளுக்கிடயிலான தேசிய மீலாத் விழா போட்டி  நிகழ்வுகள் அண்மையில் கொழும்பில் நடை பெற்றது . இப்போட்டிகளில் பங்கு பற்றிய கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட  நிந்தவூர் அல் -அஸ்ரக்  தேசிய பாடசாலை  நாடகப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று  தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளது . இதே போட்டியில்  அரபு   பேச்சுப்  போட்டியில் பங்கு பற்றிய கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட  மருதமுனை அல் -ஹம்ரா வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது .

கல்முனை கல்வி வலையத்துக்கும் பாடசாலைகளுக்கும்  பெருமை பெற்று தந்துள்ள  மாணவர்களுக்கும் ,பயிற்றுவித்த  ஆசிரியர்களுக்கும் ,கல்லூரி அதிபர்களுக்கும்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் . 

கருத்துரையிடுக

 
Top