(அப்துல்  அஸீஸ் )கல்முனை பிரதேசத்தில் அனர்த்த முகாமைத்துவ  துரிதப்படுத்தல் வேலைத்திட்டம் இன்று(03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக இன்று கல்முனை பிரதேசசெயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இப் பிரதேசம்   தொடர்ந்து பெய்து  வரும் மழை காரணமாக அனர்த்தங்கள் தொடர்பாக எதிநோக்கும் பிரச்சனைகள்,  அதனை தீர்க்க மேற்கொள்ளப்படவிருக்கும் உடனடி  நீண்டகால நடவடிக்கைகள், எதிர்கால முன்னாயத்த நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் ஆரயப்பட்டத்துடன், அதற்கான விஷேட செயலணி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது .

கல்முனை பிரதேச அனர்த்த முகாமைத்துவ  உத்தியோகத்தர் ஏ.ஆர்.நபாயிஸ்யின் ஒருங்கினைப்பிலும் பிரதேசசெயலாளர் எம்.எச்.முகமட் கனி தலைமையிலும் இடம்பெற்ற இவ் அமர்வில் கல்முனை மாநகர ஆணையாளர்  ஜெ.லியாக்கத்தலி. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  உத்தியோகத்தர் எ.சி.எ.வாகிர்  உட்பட  பாதுகாப்புப்படை அதிகாரிகள், திணைக்கள பிரதிநிதிகள் என அனர்த்த முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top