அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழில் சங்கம் தங்களுக்கு அநீதி இழைக்கப் பட்டதாக தெரிவித்து மனித உரிமை ஆணைக் குழுவில் இன்று காலை (27) முறைப்பாடு செய்துள்ளனர்.
அரசாங்கத்தினால் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மானிய அடிப்படையில் வழங்கப் பட்ட மோட்டார் சைக்கிள் நாட்டில் பல மாவட்டங்களிலும் வழங்கப் பட்ட போதிலும் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப் படாமையை காரணங் காட்டியே இந்த முறைப்பாடு இன்று கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழில் சங்க தலைவர்,செயலாளர் அடங்கிய குழுவினர் இந்த மகஜரை கையளித்ததன் பின்னர் தொழில் சங்க தலைவர் கே.முகம்மட் கபீர் ,  செயலாளர் எஸ்.ஆப்தீன் ஆகியோர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்தனர் . 

கருத்துரையிடுக

 
Top