(பி.எம்.எம்.ஏ.காதர்)
கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியப் பெருவிழா போட்டி நிகழ்வில் சிறுவர் பாடலுக்கான விருது கவிஞர் மருதமுனை விஜிலிக்கு கிடைத்துள்ளது
அரச அலுவலகர்களுக்கான படைப்பாக்கற் போட்டியில் “ வானவில் ரசிப்போம்” எனும் தலைப்பினாலான சிறுவர் பாடல் துறைக்கே இவ்விருது வழங்கப்படுகிறது
திருகோணமலை விவேகானந்தாக் கல்லூரியில் (8) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள கிழக்குமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழாவிலேயே இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது
இலங்கை-இந்திய படைப்பாளிகளிடையே யாத்ரா சஞ்சிகை நடத்திய கவிதை போட்டி விருது -பாரதி தமிழோசைக் கழகத்தின் சிறப்பு விருது- கலாசார மரபுரிமை அமைச்சின் தேசிய மட்ட விருதுகள் உள்ளிட்ட பல உயர் விருதுகளை பல தடைவ பெற்ற கவிஞர் விஜிலி 1990 முதல் எழுதி வரும் அதிக கவன ஈர்ப்பைப் பெற்ற கவிஞராவார்.


கவிஞர் மருதமுனை விஜிலிக்கு  கல்முனை நியூஸ் இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது 

கருத்துரையிடுக

 
Top