(ஹாசிப் யாஸீன்)

மருதமுனை மேட்டு வட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடன் வழங்குவதற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார் .

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்கவுக்கும், பிரதி அமைச்சர்  எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோருக்கிடையேயான சந்திப்பு நேற்று (13) வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர் , மிக நீண்ட காலமாக மருதமுனை மேட்டு வட்டை வீடுகள் உரிய  மக்களுக்கு வழங்கப்படாமல் தாமதப்படுத்தியதனால் இவ்விடயம் பெரும் சர்ச்சையாக்கப்பட்டுள்ளதை அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டினார் .

மருதமுனையில் சுனாமி வீட்டுத்திட்ட விநியோகத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் விடுபட்டுள்ளனர்  அவர்களையும் உள்வாங்கி இவ்வீடுகளை வழங்குவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபருக்கு பிரதி அமைச்சர்  எச்.எம்.எம்.ஹரீஸ் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார் 

கருத்துரையிடுக

 
Top