அம்பாறை - கொண்டவெட்டுவான்  இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 


இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் தற்கொலை செய்து கொண்டவர் குருநாகல் - மாவத்தகம பகுதியைச் சேர்ந்த, 27 வயதான ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இது குறித்த மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

 
Top