அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர் சி.எம்.ஹலீம்  எடுத்துக்கொண்ட பெரு முயற்சி 


கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் சமூகத்தின் கல்வித் தேவையினையும்,கற்பவர்களின் இலக்கு நோக்கிய  பயணத்திற்கு துணை புரிந்து வரும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட றிசாத் பதியுதீன் பவுண்டேசன் இன்று நாடு தழுவிய முறையில் தமது கல்வி செயற்பாட்டினை விஸ்தீரணப்படுத்தியுள்ளது.
றிசாத் பதியுதீன் பவுண்டேஷன் வருடா வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை தைரியத்துடனும்,தெளிவுடனும் பரீட்சை மண்டபத்துக்குள் அனுப்பும்முன்னோடி மாதிரி பரீட்சை திட்டமொன்றினை சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மேற்கொண்டு  வந்தன.இதனது வரவேற்பும் ஏனைய மாவட்டங்களில் பெறப்பட்ட தமிழ் மொழிப் பாடசாலைகளை மையப்படுத்தி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இதனை 25 மாவட்டங்களிலும் முன்னெடுப்பதன் அவசியத்தை பவுண்டேஷனின் நிறுவுனர் அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்துக்கொண்டார் .
கல்வித்துறையில் உள்ளவர்கள அணுகி அவர்களின் ஆலோசனையின் பேரில் நாடு தழுவிய முறையில் கா.பொ.த.சாதாரண தர பரீ்ட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை செயன் முறை பரீட்சையொன்றிற்கும்,அவர்களது புள்ளிகள் எவ்வாறு பதியப்படுகின்றது என்பது தொடர்பிலும்,மாணவர்கள் பரீட்சைக்கு முன்னார் இன்னும் பெற வேண்டிய அறிவு தொடர்பில் அறிவூட்டுவதும்  இந்த றிசாத் பதியுதீன் பவுண்டேஷனின் முக்கிய பணியாகும்.
இந்த பணிக்கு தற்போது மாவட்டங்கள் தயாராகிவருகின்ற நிலையில் இது வரையிலும் தமிழ் மொழி மூலமாக தோற்றவுள்ள 30 ஆயிரம் மாணவர்கள் இந்த இலவச செயலமர்வுக்கு தயாராகிவருகின்றனர்.

இதன் அடிப்படையில் அமைச்சரின் இணைப்பாளரும் சமூக சேவையாளருமான  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர் சி.எம்.ஹலீம்  எடுத்துக்கொண்ட பெரு முயற்சி காரணமாக  கல்முனை கல்வி வலயத்தில் உள்ள  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களுக்கு  இந்த முன்னோடிப் பரீட்சைக்கான  வினாப் பத்திரங்கள்  கிடைக்கப் பட்டுள்ளது.  கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ. கையூம்  அவர்களிடம் மாதிரி வினாப் பத்திரங்களை ஹலீம் ஒப்படைத்து  அதிபரினால் மாணவர்களுக்கு விநியோகிக்கப் பட்டது. இந்த நிகழ்வில் அதிபர் ,பிரதி அதிபர் ,உதவி அதிபர் என பலரும் கலந்து கொண்டனர் 
குறிப்பாக தமிழ்,கணிதம்,ஆங்கிலம்,விஞ்ஞானம்வரலாறு ஆகிய 5 பாடங்களில் இந்த மாணவர்களின் திறமைகளையும்,ஞாபசக்தியினையும் பரிசோதிக்கும் பரீட்சையாக இது நடத்தப்படவுள்ளது.இதன் மூலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அரசாங்க கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களை ஒரு முறை மீளாய்வு செய்து கொள்ள முடியும்,அது போல் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கும் இந்த முன்னோடி பரீட்சை இடம் கொடுக்கும் என்பது றிசாத் பதியுதீன் பவுண்டேஷனின் நிறுவுனர் அமைச்சர் றிசாத் பதியுதீனின் எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சரின் இணைப்பாளரும் சமூக சேவையாளருமான  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர் சி.எம்.ஹலீம் அங்கு உரையாற்றும் போது குறிப்பிட்டார் கருத்துரையிடுக

 
Top