அம்பாறை மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க மக்களினால் இன்று திங்கட்கிழமை கல்லறை பெருநாள் அனுஷ்டிக்கப்பட்டது. 
இதன் ஓர் அங்கமாக கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் சேமக்காலையின் வளாகத்தில் இறந்த ஆத்மாக்களுக்கு திருப்பலி இடம்பெற்றது. 
திருப்பலியினை கல்முனை திரு இருதயநாதர்  ஆலய  பங்குத் தந்தை லியோ  அடிகளார்  ஓப்புக் கொடுத்தார்.
 இதன்போது,இறந்தவர்களின் உறவினர்கள் கல்லறையை அலங்கரித்து தீபம் ஏற்றி இறந்தவர்களை நினைவு கூர்ந்ததுடன் கல்லறைகளையும் ஆசீர்வாதம் செய்தனர். 


கருத்துரையிடுக

 
Top