பீ.எம்.எம்.ஏ காதர்>யு.எம்.இஸ்ஹாக் 


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் இன்று சனிக்கிழமை  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோட்டைக்கல்லாறு பாடசாலைக்கு அருகில் பயணித்த தனியார் பேரூந்து மற்றுமொரு பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதமுனையை சேர்ந்த 30 வயதுடைய காசிம் மௌலானா அஸ்பாக் மௌலானா என்பவர்  உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.>
இந்நிலையில் தனியார் பேரூந்துகளிடையேயான போட்டித் தன்மையே இந்த விபத்திற்கு காரணம் என விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தை அடுத்து குறித்த இரண்டு பேரூந்துகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திய பேரூந்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

 
Top