யு.எம்.இஸ்ஹாக் 

இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் சம்மாந்துறை கிளை அலுவலக திறப்பு விழாவும், அங்கதவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் வைபவமும்  இன்று சம்மாந்துறையில் இடம் பெற்றது .

இலங்கை மனித உரிமைகள் அமைப்பின்  அம்பாறை மாவட்ட  பிரதிப் பணிப்பாளர் ஐ.மொஹமட்  சபீக்  தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர்  எம்.என்.எம்.அஸீம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .
சம்மாந்துறை  இலக்கம் 24  மத்திய  வீதியில்   பிரதம அதிதியால் அலுவலகம் திறந்து வைக்கப் பட்டு  சம்மாந்துறை  தாருஸ்ஸலாம் மகா வித்தியாலய அஸ்ரப் மண்டபத்தில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வும் கூட்டமும் இடம் பெற்றது .

நிகழ்வில் மனித உரிமைகள் அமைப்பின்  முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் 

கருத்துரையிடுக

 
Top