விடுதலைப் புலிகளின் மரணித்த உறுப்பினர்களை நினைவுகூரும் நாளான மாவீரர் தினம், இன்று (27) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
 
இன்று (27) யாழ். நல்லூர் கோயிலின் முன்னால் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதன்போது, யாழ். நல்லூர் கோயிலின் முன்னால் விளக்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
 
பிரபாகரனின் மைத்துனரான கே. சிவாஜிலிங்கம், கடந்த புதன்கிழமை (25) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இதற்கான அழைப்பை விடுத்திருந்தார். மேலும் எந்த தடை வந்தாலும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
ஆயினும் குறித்த நிகழ்வில் நூற்றுக்கும் குறைவானோரே பங்குபற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  
அதன் பின்னர் யாழ். மரியன்னை பேராலயத்திற்கு சென்று அங்கும் மெழுவர்த்தி ஏற்றிஅ ஞ்சலி செலுத்திய அவர், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது எமது உரிமை அதனை தடுக்க யாராலும் முடியாது. உயிரிழந்த 50 ஆயிரம் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவது மன நிறைவைத் தருக்கின்றது எனத் தெரிவித்தார்.TKN

 

கருத்துரையிடுக

 
Top