அகவை அறுபதை நிறைவு செய்து ஓய்வு பெறும்  கல்முனை கல்வி வலய தமிழ் கோட்டத்தின்  கோட்டக்  கல்விப் பணிப்பாளர்  பொ .ஜெகநாதன் அவர்களின்  நிறைவான சேவையைப் பாராட்டி  கல்முனை வலயக் கல்வி அலுவலக கல்விசாரா  உத்தியோகத்தர்களினால்  ஏற்பாடு செய்யப் பட்ட பிரியாவிடை  சிறப்பு நிகழ்வு இன்று (18) வலயக் கல்வி அலுவலக மண்டபத்தில் இடம் பெற்றது .

வலயக் கல்வி அலுவலக கணக்காளர் எல்.ரீ . சாலிதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் , கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.மயில்வாகனம், ஏ.எல்.எம்.முக்தார் ,எஸ்.எல்.ஏ.ரஹீம் ,பீ.எம்.வை.அரபாத்  உட்பட  வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர் .

பெரிய நீலாவணையை  பிறப்பிடமாகக் கொண்ட  பொன்னுதுரை  தவமணிக்கு  1955.11.21 இல்  மூத்த புதல்வனைப் பிறந்த இவர்  பெரிய நீலாவணை விஷ்ணு  மகா வித்தியாலயம் , சரஸ்வதி வித்தியாலயத்தில்  ஆரம்பக் கல்வியைக் கற்று  மட்டக்களப்பு  சிவானந்தாவில் உயர் கல்வி கற்ற இவர்  ஆசிரியராக நியமனம் பெற்று  மட்டுநகர் ஆசிரியர் கலாசாலையில்  ஆசிரியர் பயிற்சி பெற்றார். விஷ்ணு மகாவித்தியாலயம்,ராணமடு  இந்து மகா வித்தியாலயங்களில் ஆசிரியராக பனி புரிந்த இவர்  சரஸ்வதி வித்தியாலய அதிபராக பணியாற்றி  கல்முனை கல்வி வலயத்தில் ஓய்வு பெரும் 20.11.2015 வரை  தமிழ் பிரிவுக் கோட்டக்  கல்விப் பணிப்பாளராக பதவி வகித்தார் .
இதே வேளை  கல்முனை கல்வி வலய தமிழ் கோட்ட அதிபர்களினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள சேவை நலன் பாராட்டு விழா 2015.11.21 சனிக்கிழமை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது கருத்துரையிடுக

 
Top