பதிப்பு 02
பிணை வழங்கப்பட்ட கைதிகளால், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட பிணை விதிகளை உடனே பூர்த்தி செய்ய முடியாததால் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
எனவே குறித்த பிணை விதிகளை பூர்த்தி செய்த பின் பிணையில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
(தலா ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணையிலும், குறித்த பிணையாளர்கள்,  சந்தேகநபர்களின் ஊரைச் சேர்ந்தவர்கள் என கிராம சேவகர் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், சந்தேகநபர்களின் கடவுச்சீட்டுகளை தடைசெய்வதாக அறிவித்த நீதவான், இரு வாரங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் அல்லது கொழும்பிலுள்ள தீவிரவாத ஒழிப்பு விசாரணை பிரிவில் சமூகமளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
 
தாங்கள் தமது முகவரியை மாற்றுவதாயின், அது குறித்து தீவிரவாத ஒழிப்பு விசாரணை பிரிவிற்கு அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.)

பதிப்பு 01
விடுதலை கோரிய 31 தமிழ் கைதிகளுக்கு பிணை
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, தீவிரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் (1979) கைது செய்யப்பட்ட 31 பேர் இன்று (11) விடுதலை செய்யப்பட்டனர்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவின் உத்தரவிற்கமையவே குறித்த 31 தமிழர்கள்  இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
 
இதேவேளை, குறித்த 31 பேரும் பிணையில் விடுதலை செய்வதற்காக இன்று (11) காலை நீதிமன்றிற்கு கொண்டு வரப்பட்ட போதிலும், அவர்களை எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்தே சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மீண்டும் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டு பிணை வழங்கப்பட்டது.
 
தலா ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணையிலும், குறித்த பிணையாளர்கள்,  சந்தேகநபர்களின் ஊரைச் சேர்ந்தவர்கள் என கிராம சேவகர் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
 
மேலும், சந்தேகநபர்களின் கடவுச்சீட்டுகளை தடைசெய்வதாக அறிவித்த நீதவான், இரு வாரங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் அல்லது கொழும்பிலுள்ள தீவிரவாத ஒழிப்பு விசாரணை பிரிவில் சமூகமளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
 
தாங்கள் தமது முகவரியை மாற்றுவதாயின், அது குறித்து தீவிரவாத ஒழிப்பு விசாரணை பிரிவிற்கு அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top