( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஒழுக்காற்று சபை ஒழுங்கு செய்திருந்த ” மாணவத்தலைவர் தின விழா ” மிகவும் விமரிசையாக கல்லூரி இராசவாசல் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
ஒழுக்காற்று சபைத் தலைவர் யு.எல்.எம்.இப்றாஹிம் மற்றும் ஒழுக்காற்று சபை உறுப்பினர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் ( ஜவாத்) பிரதம அதிதியாகவும் , கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் அபிவிருத்திக்கும் திட்டமிடலுக்குமான பிரதம பொறியியலாளர் யு.கே.எம்.முஸ்ஜித் , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் , சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை , வைத்திய அதிகாரி டாக்டர் என் .ஆரிப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , பிராந்திய உளவள மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம்.அர்ஸாத் காரியப்பர் விசேட அதிதியாகவும் , கல்லூரியின் பிரதி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட் , ஏ.பி.முஜீன் , உதவி அதிபர்களான எம்.எஸ்.அலிகான் , எம்.ஐ.எம்.அஸ்மி ,  எம்.எச்.எம்.அபுபக்கர் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மாணவத் தலைவர்களின் கலை நிகழ்வுகளும் திறமையை வெளிக்காட்டிய மாணவத் தலைவர்களுக்கு விருதுகள் வழங்கிய கௌரவிப்புகளும் இடம்பெற்றன.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மாகாணசபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் கலந்து கொண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும்.
கருத்துரையிடுக

 
Top