அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் 
"இன்னும் ஓரிரு வருடங்களில் 309 ஆக உள்ள சதொச கிளைகளின் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிப்பதுடன், மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள நிறுவனங்கள் போன்று சதொச கிளைகளையும் நவீனமயமாக்குவதே எமது நோக்கமாகும்."நவீன மயமாகும் 
-தேசியத்தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன்-
இன்று (19), களுத்தரை மாவட்ட, மதுகம, நேபொடயில், சதொச நிறுவனத்தின் 309வது கிளை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்குதொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
சகல வசதிகளும் கொண்ட ஒரு சதோச கிளையாக இது அமைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக சதோச நிறுவனம் இலாபம் அற்ற ஒரு நிறுவனமாகவே இயங்குகின்றது. எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இதனை ஒரு இலாபம் ஈட்டக்கூடிய அரச நிறுவனமாகவும், அதிகமானவர்கள் வேலை செய்யக்கூடிய இடமாக மாற்றுவதாகவும் தெரிவித்தார். 
மேலும், அனைத்து சதோச நிறுவனங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக அமைக்க திட்டமிட்டுள்ளாதவும் அமைச்சர் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

 
Top