(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட கல்வியலாளர் எம்.ஏ.எம்.ஜெலீல் (எம்.ஏ) கலை>இலக்கியத் துறைக்காக கிழக்கு மாகாண வித்தகர் விருது பெற்றார். கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட “தமிழ் இலக்கியப் பெருவிழா-2015”திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில் அண்மையில் (08-11-2015)நடைபெற்றது இதன் போதே இவருக்கு இந்த விருது வழங்கப்படது.
கிழக்கு மாகாண  பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்>கௌரவ அதிதிகளாக விவசாய அமைச்சர் கீ.துரைராசசிங்கம்<சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்>மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்>கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.டி.எம்.எஸ்.அசங்க அபேவர்த்தன>பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு இவருக்கான விருதினை வழங்கி வைத்தனர்.
இதே போன்று கலைத்துறையின் வளர்ச்சிக்காக ஈடேற்றப்பட்ட சிறந்த சேவைக்கு புகழளிக்கும் வண்ணம்  அரசாங்க கலாசார அலுவல்கள் திணைக்களத்தால்; கடந்த 2014-டிசம்பர் மாதம் 14ம் திகதி கொழும்பில் நடைபெற்ற வைபவத்தில் “கலாபூஷண அரச விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மருதமுனையில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியையும்>சிரேஸ்ட இடைநிலைக் கல்வியையும் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூயில் கற்றுத் தேறினார்.அதன் பின்னர் 1964.06.01ம் திகதி ஆசிரிய நியமனம் பெற்றார். அதைத் தொடர்ந்து 1966ம்-1967ம் ஆண்டு காலப் பகுதியில் அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்டு பயிற்றப்பட்ட ஆசிரியரானார்.
பொலநறுவை>கொழும்பு>சம்மாந்துறை  போன்ற பிரதேசங்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1976ம்>1980ம் ஆண்டு காலப் பகுதியில் களனிப் பல்கலைக் கழகத்தில் கலைமானி சிறப்புப் பட்டத்தைப் பெற்றார்.அத்துடன் 1996ம்>1997ம் ஆண்டுகாலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.பட்டத்தையும் பெற்றார்.
இவர் மருதமுனை  அல்மனார் மத்திய கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராகவும்>பிரதி அதிபாராகவும்  கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் மாணவர்களின் நன்மை கருதி இலகு இலக்கணம்>செந்தமிழ்  வளர்த்த புலவர்கள்>கல்வி டிப்ளோமா சிங்களம்>தேசிய கற்பித்தலில் டிப்ளோமா (தமிழ்)>க.பொ.த சாதாரண தர வினாத் தாள்கள்(தமிழ் மொழி)>தமிழ் இலக்கியம் -01>தமிழ் இலக்கியம்-2>இலகு  சிங்களம்>தமிழ் மொழி-பயிற்சி நூல்>கல்வி மாணிப்பட்ட இலக்கிய நூல்கள் மற்றும் பல ஆய்வு  நூல்களையும>ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 
இவர் அட்டாளைச்சேனை  கல்விக் கல்லூரியில் உப-பீடாதிபதியாக ஐந்து வருடங்கள்  கடமையாற்றி ஆசிரிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உயர் பணிபுரிந்தார். புலமைப்பரிசில் பெற்று டில்லி பல்கலைக் கழகத்தில் கற்று உயர் பட்டம் பெற்றார்.மாணவர்களை அரவணைத்து கல்வி கற்;பிப்பதில் சிறந்த ஆசானாவார்.
அனைவருடனும் தன்னடக்கத்துடனும்> நற்பண்புடனும் இன்முகத்துடன் பழகுபவர்.இவர் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் சமூகப்பணி செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எமது கல்முனை நியூஸ் இணையதளமும் 

அவரை வாழ்த்துகின்றது  

கருத்துரையிடுக

 
Top