யு.எம்.இஸ்ஹாக் நீரிழிவு  நோயைக் கட்டுப்படுத்தி  ஓர் ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்துவோம் என்ற தொனிப் பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய்ப் பிரிவு  ஏற்பாடு செய்த  உலக நீரிழிவு  தின விழிப்புணர்வு  ஊர்வலம் இன்று கல்முனையில் இடம் பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த விழிப்புணர்வு  ஊர்வலத்தில் சுகாதார பிரதி அமைச்சர் எம்.சீ.பைஸல் காஸிம் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு  ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தொற்றா நோய்ப் பிரிவு  வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரீஸ் உட்பட வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் பொது மக்களை விழிப்பூட்டும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் வினியோகிக்கப் பட்டன.கருத்துரையிடுக

 
Top