அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள் மிக அமைதியாக இடம் பெற்றது.

 நற்பிட்டிமுனை அம்பலத்தடி ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் இடம் பெற்ற தீபாவளி வழிபாடுகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான துக்க தினமாக பிரகடனப் படுத்தப்பட்டு அவர்களின் விடுதலை வேண்டி விசேட பூசை வழிபாடுகள் இடம் பெற்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்த விசேட பூசை வழிபாட்டில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவ தீர்மானத்துக்கமைய எதிர்வரும் வெள்ளிக் கிழமை(13) வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பிரதேசங்களிலும் ஹர்த்தால் நடத்தவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
கருத்துரையிடுக

 
Top