(பத்மராஸ் கதிர்)
காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் செயலாளரான ஆத்மீகவாதி திரு. கு.ஜெயராஜி அவர்கள் மனித உரிமைகள் ஸ்தாபனத்தின் (FC) அனுசரணையில் தென்னாபிரிக்காவின் தலைநகரான ஜொகன்னஸ் பேர்க்கிற்கு சென்று பயிற்சிக் கருத்தரங்கில் கலந்துகொண்டு இலங்கையின் சமூக நீதி தொடர்பான விளக்கவுரையினையும், நம்மவரின் புகழினையும் சர்வதேசத்தில் ஒலிக்கச் செய்தமைக்ககாக காரைதீவு இந்துசமய விருத்திச்  சங்கம், மற்றும் காரைதீவின் பொது அமைப்புக்கள் இனைந்து ஏற்பாடு செய்திருந்த​ மாபெரும் பாராட்டுவிழா அண்மையில்  காரைதீவு இராமகிருஷ்ண சங்க பெண்கள் பாடசாலையில் திரு.செ.மணிமாறன் (இ.கி.ச பெண்கள் வித்தியாலய அதிபர்) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு  பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்  கலந்து சிறப்பித்ததோடு நிகழ்விற்கான ஆசியுரையினை பிரம்மஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள்  நிகழ்த்தினார்.

மேலும் ஆத்மீகவாதி திரு.கு.ஜெயராஜி அவர்களுகு பொது அமைப்புக்கள் மற்றும் ஆலைய தர்மகர்த்தாக்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு வாழ்த்துப் பாக்களும் பாடப்பட்ன. 
கருத்துரையிடுக

 
Top