(யு.எம்.இஸ்ஹாக்) சென்.ஜுட் தாதியர் சர்வதேச பயிற்சிக் கல்லூரியின் கல்முனைப் பிராந்திய நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள  வருடாந்த பட்டமளிப்பு விழா எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை 15.11.2015 நடை பெறவுள்ளது.

சென்.ஜுட் தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தலைவர் அப்துல் வாஹிட் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடீயன் மண்டபத்தில் இடம் பெறவுள்ள தாதி பயிற்சியை நிறைவு  செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா வைபவத்தில்  பிரதம  அதிதிகளாக சுகாதார பிரதி அமைச்சர் எம்.சீ.பைஸல் காஸிம் ,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியை முடித்த தாதிகளுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கவுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலி,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல.எம்.நஸீர், கல்முனை பிரதேச செயலாளர்களான எம்.எச்.எம்.கனி கே.லவநாதன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top