(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை“ஷம்ஸ் 95”பாலர் பாடசாலை மாணவர்களின் மொட்டுக்களின் மகுடம் சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை(25-11-2015)மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் பாடசாலையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.இல்ஹாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக வர்த்தகர் எம்.ஐ.ஏ.பரீட் கலந்து கொண்டார்.அதிதிகளாக மருதமுனை பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.இங்கு பிரதம அதிதி உரையாற்றுகையில் :-இந்த சிறார்களின் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்கின்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
நாங்கள் சிறுவர்களாக இருக்கின்ற  காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படவில்லை இப்போது எங்கு பார்த்தாலும் சிறப்பான நிகழ்வுகள் நடைபெறுகின்றன இன்றைய சிறார்கள் மிகவும் திறமையுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.இவர்களைப்பார்கின்ற போது மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கின்றது என்றார்.
இங்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன  மாணவர்களுக்கு பிரதம அதிதி,மற்றும் அதிகள் மாணவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கினார்கள். கருத்துரையிடுக

 
Top