யு.எம்.இஸ்ஹாக் 

இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று  சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நான்கு மணிவரை நடைபெறுகிறது . கல்முனைத் தொகுதிக்கான தேர்தல் கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் சுமுகமாக நடை பெற்றுக்  கொண்டிருக்கிறது .
இந்த இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் 47569 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சுகத்ஹேவா விதாரண தெரிவித்தார்.
நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து 11 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு  செய்வதற்காக 109 இளைஞர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 49 வேட்பாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 32 வேட்பாளர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 28 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலிருந்து 18920 இளைஞர்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 18607 இளைஞர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 10042 இளைஞர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
இதே போன்று கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலிருந்து நான்கு தொகுதிகளுக்கும்  நான்கு பேரும் மற்றும் இங்கு ஒருவர் போனஸ் அடிப்படையில் ஒருவருமாக ஐந்து பேரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலிருந்து மூன்று பேரும், திருகோணமலை மாவட்;டத்தில் மூன்று தொகுதிகளில் இருந்தும் மூன்று பேருமாக 11 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் தெரிவு  செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.கருத்துரையிடுக

 
Top