(யு.எம்.இஸ்ஹாக் )
கல்முனை பிராந்தியத்தில்  போற்றத்தக்க கல்விமானாக விளங்கும் ஒய்வு பெற்ற முன்னாள் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரும் , கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை முன்னாள் அதிபரும் பிரபல எழுத்தாளருமான  அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியு  அவர்களுக்கு இன்று அகவை 77. தனது பிறந்த நாளை அவர் இன்று கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலைக்கு சென்று அங்கு கொண்டாடினார் 

கல்லூரி அதிபர்  வே.பிரபாகரன் தலைமையில் இன்று (24) காலை இடம் பெற்ற வைபவத்தில்  மலர் மாலை அணிவித்து  பொன்னாடை போர்த்தி நினைவு சின்னங்களும் வழங்கப் பட்டன .

நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் ,ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர்                       பொ .ஜெகநாதன் , கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபர் அருட் தந்தை பிரைனர் செல்லர்  , ஓய்வு பெற்ற அதிபர் கே.சந்திரலிங்கம், பொறியியலாளர் ஹென்றி அமல்ராஜ் ,பிரதி அதிபர் எஸ் .கலையரசன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில்  அருட்சகோதரர்  எஸ்.ஏ.ஐ.மத்தியு நினைவாக  கேடயம் ஒன்றை கையளித்ததுடன்  கல்லூரியில் சிறந்த மாணவராக தெரிவு செய்யப் பட்ட மாணவி ஒருவருக்கும் நினைவு பரிசு வழங்கினார் .
ஆசிரியர்கள் பலரும்  அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் . கல்முனை நியூஸ் இணைய தளமும்  வாழ்த்துக்களை தெரிவிக்கிறது .கருத்துரையிடுக

 
Top