எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அகவை 66 இல் கால் பதிக்கின்றது.
16.11.1949 அன்று முன்னாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மர்ஹும் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் கல்முனை மற்றும் சாய்ந்தமருது  பிரதேச மாணவர்களின் கல்வித் தாகத்தை தீர்க்கும் வகையில் தனது சொந்தக் காணியில் இக் கல்லூரியை ஆரம்பித்தார் இன்று தேசிய ரீதியிலும் சர்வதேச  ரீதியிலும் புகழ் பரப்பி ஆலம் விருட்சம் போல் வளர்ந்து காட்சியளிக்கின்றது.
இந் நாளை முன்னிட்டு திங்கட் கிழமை கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் பற்றிய நினைவு துண்டுப் பிரசுரம் வெளியிட்டு வைக்கப்படுவதுடன் ஞாபகார்த்த மரக்கன்டொன்றும் கல்லூரி வளாகத்தினுள் நட்டு வைக்கப்படவுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top