ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26ஆவது போராளர் மாநாடு கண்டி, பொல்கொல்லையிலுள்ள தேசிய கூட்டுறவு கற்கை நிலையத்திலுள்ள மஹிந்த ராஜபக்ஷ கேட்போட் கூட்டத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகின்றது. இதன் முதல் அமர்வில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.
இந்த புதிய நிர்வாக சபையினை தெரிவுசெய்வதற்கான அதியுயர்பீட கூட்டம் கட்சி தலைவர் தலைமையில் நேற்றிரவு கண்டியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி கட்சியின் தலைவராக 15ஆவது தடவையாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதன்போது, 26 உறுப்பினர்களின் பெயர் விபரங்களை கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார். 

இதன் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் முழு விபரம்

தலைவர் - ரவூப் ஹக்கீம் ,தவிசாளர் – பஷீர் சேகுதாவூத்,சிரேஷ்ட பிரதித் தலைவர் - ஏ.எல்.ஏ.மஜீத்,பிரதித் தலைவர் 1 – ராவுத்தர் நெய்னா முஹம்மத்,பிரதித் தலைவர் 2 - ஹாபிஸ் நசீர் அஹமட்,பிரதித் தலைவர் 3 – யூ.டி.எம்.அன்வர்,பிரதித் தலைவர் 4 – எச்.எம்.எம்.ஹரீஸ்,பொதுச் செயலாளர் - எம்.ரி.ஹசன் அலி,பொருளாளர் – எம்.எஸ்.எம்.அஸ்லம்,மஜ்லிஸுல் ஷுரா தலைவர் – ஏ.எல்.எம்.கலீல் மௌலவி,தேசிய ஒருங்கிணைப்பாளர் – ஏ.எம்.மன்சூர்,கொள்கை பரப்புச் செயலாளர் – யூ.எல்.எம்.முபீன்,தேசிய அமைப்பாளர் – சபீக் ராஜாப்தீன்,சர்வதேச விவகார பணிப்பாளர் – ஏ.எம்.பாயிஸ்,யாப்பு விவகார பணிப்பாளர் – எம்.பி.பாரூக்,இணக்கப்பாட்டு வாரியம் - எம்.எஸ்.தௌபீக்,உலமா காங்கிரஸ் - எச்.எம்.எம். இஸ்யாஸ் மௌலவி,அரசியல் விவகார பணிப்பாளர் – எஸ்.எம்.ஏ.கபூர்,பிரதித் தவிசாளர் – எம்.நயிமுல்லாஹ் ,பிரதிச் செயலாளர் – நிசாம் காரியப்பர்,பிரதிப் பொருளாளர் – கே.எம்.ஏ.ஜவாத்,மஜ்லிஸுல் ஷுரா பிரதித் தலைவர் - எஸ்.எல்.எம்.ஹனீபா (மதனி),பிரதி தேசிய ஒருங்கிணைப்பாளர் – ரஹ்மத் மன்சூர் ,பிரதி தேசிய அமைப்பாளர் – பைசால் காசீம்,செயற்குழு செயலாளர் – சியாத் அஹமட்,போராளர் மாநாட்டு செயலாளர் – ஐ.எல்.எம்.மாஹீர் ,மஜ்லிஸுல் ஷுரா செயலாளர் – யூ.எம்.வாஹீட்
            

கருத்துரையிடுக

 
Top