(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி பிரிவுக்கான  “புனித ஜோன் அம்பியுலன்ஸ் முதலுதவிப்  பாசறை -2015 நேற்று (07-11-2015) காலை 6.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரை ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மருதமுனை பிரதேச வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர்  ஏ.எல்.எம்.மிஹ்ழார் கலந்து கொண்டார்.விஷேட அதிதிகளாக புனித ஜோன் அம்பியுலன்ஸ் முதலுதவிப் பிரிவின் மாவட்ட ஆணையாளர் எம்.எச்.எம்.மன்சூர் ,உதவி மாவட்ட ஆணையாளர் எம்.ஜே.எம்.அமீர்,பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஸர்ரப் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் கௌரவ அதிதிகளாக உதவி மாவட்ட ஆணையாளர்கள்  பலரும்   கலந்து கொண்டனர்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி,அல்மதீனா வித்தியாலயம்,பெரிய நீலாவணை விஷ்னு வித்தியாலம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 92 மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டனர்.இங்கு அணி நடை,நோயாளியைக் கொண்டு செல்லுதல்,புனித ஜோன் அம்பியுலன்ஸ் பாடல் பயிற்சி,முதலுதவித்திறன் மதிப்பீடு,கலை நிகழ்ச்சிகள் அணிவகுப்பு மரியாதை என்பன இடம் பெற்றது.  
பிரதம அதிதி டாக்டர்; ஏ.எல்.எம்.மிஹ்ழார் உரையாற்றுகையில் :-ஆண்மீகத்திற்கும், தலைமைத்துவப் பரீட்சைகளுக்கும் ,எதிர்கால வாழ்க்கைக்கும்,ஒழுக்கமான சீரான நடைமுறை  வாழ்க்கைக்கும் இவ்வாறான பயிற்சிகள் மிகவும் அவசியமாகிறது.
ஒழுக்கமுள்ள சீரான மாணவ சமூகத்தை உருவாக்குவதற்கு சமூகத்திலுள்ள  சகல தரப்பினரும் பாடுபட வேண்டும்.எந்த விடையமாக இருந்தாலும் ஒழுக்க விழுமியங்கள் சரியாக இல்லையென்றால் அந்த சமூகம் முன்னேற முடியாது.
ஆகவே மாணவர்களாகிய நீங்கள் இவ்வாறான பயிற்சிகளைப் பெற்று உங்கள் முன்னேற்றத்திற்கும் சமூக மேம்பாட்டுக்கும், வழிகாட்ட வேண்டும் என்றார்.  
இங்கு கலந்து கொண்ட மாணவர்கள், ஆண்கள் ஐந்து குழுக்களாகவும் பெண்கள் ஐந்து குழுக்களாகவும் பிரிக்கப்பட்டு போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன  இதில் ஆண்கள் பிரிவில் சார்ளி குழுவும்,பெண்கள் பிரிவில் டெல்டா குழுவும்  முதல் இடத்தைப் பெற்று மர்ஹூம் என்.எம்.எம்.இஸ்மாயில் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.
மாவட்ட ஆணையாளர் எம்.எச்.எம்.மன்சூர் இந்த இரண்டு அணிகளுக்குமான வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார்.நிகழ்வில் பங்குபற்றிய ஏனைய அணிகளுக்கான கிண்ணங்களும்,மாணவர்கள் அனைவருக்குமான   சாண்றிதழ்களும், பரிசுப் பொதிகளும்  அதிதிகளால் வழங்கப்பட்டன.


  

கருத்துரையிடுக

 
Top